UTVNEWS | COLOMBO) -இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் சமரா கப்புகெதர அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் சமரா கப்புகெதர.
இவர் இறுதியான 2017ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச அணிக்காக விளையாடினார்.
8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 ஓட்டங்களும், 102 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1624 ஓட்டங்களும், 43 இருபதுககு 20 போட்டிகளில் விளையாடி 703 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் – மொத்த போட்டிகள் 08
முதல் போட்டி : இலங்கை – இங்கிலாந்து, 2006.05.11-15
இறுதி போட்டி : இலங்கை – நியூஸிலாந்து, 2009.08.26-30
மொத்த ஒட்டம் : 418
அரைசதம் : 04
ஒருநாள் போட்டி – மொத்த போட்டிகள் 102
முதல் போட்டி : அவுஸ்திரேலியா – இலங்கை, 2006.01.29
இறுதி போட்டி : பாகிஸ்தான் – இலங்கை, 2017.10.18
மொத்த ஓட்டம் : 1624
அரைசதம் : 08
இருபதுக்கு – 20 – மொத்த போட்டிகள் 43
முதல் போட்டி : இங்கிலாந்து – இலங்கை, 2006.06.15
இறுதிப் போட்டி : இலங்கை – பங்களாதேஷ், 2017.04.06
மொத்த ஓட்டம் : 703
அரை சதம் : 01