உள்நாடு

பேருந்துக்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் நடவடிக்கை

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனவரி 1ம் திகதி முதல் பயணிகள் பேருந்துக்களில் ஒலிபரப்பக்கூடிய பாடல்களின் பட்டியலை அரசாங்கம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் உரத்த இசை இசைக்கப்படுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணையம் பொதுமக்களிடமிருந்து சுமார் 15,000 புகார்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புதிய விதிமுறையின்படி, தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான பேருந்துகள் மியூசிக் சிடி அல்லது அவர்கள் விரும்பும் கசட்டுகளை இயக்க தடை விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் , பேருந்துகளில் வானொலி ஒலிபரப்பிற்கும் ஒலி வரம்பும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 11 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

அசாத் சாலிக்கு ஆணைகுழு அழைப்பு

கடலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்துக் கொள்ளுங்கள்