உள்நாடு

நாட்டின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மாவட்டத்திலும் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து பேரணி

முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை

அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்