உள்நாடு

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியிடம் 5 மணி நேர வாக்குமூலம்

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி, இரண்டு சட்டத்தரணிகளுடன் நேற்று(08) மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதற்கமைய குறித்த சுவிஸ் தூதரக அதிகாரியிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்ற வைத்தியரிடம் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி, அதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விடயங்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது

இடியுடனான மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இரண்டு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

editor