உள்நாடு

இன்று மாலை கடும் மழை பெய்யும் சாத்தியம்

(UTV|COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் இன்று (08) மாலை கடுமையான மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கம் காணப்படும் என்றும், வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும். 200 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ, மேல் ,மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு ,அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.

Related posts

எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

அட்டாளைச்சேனை பிரதேச மக்களை – அச்சுறுத்திவரும் காட்டு யானைகள்!