சூடான செய்திகள் 1விளையாட்டு

பங்களாதேஷ் அணி வீரர்களின் போராட்டம் நிறைவு

(UTVNEWS | COLOMBO) – போட்டிகளிலும் பயிற்சிகளிலும் பங்கேற்பதில்லை என்ற போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவருவதாக பங்களாதேஷ் அணி வீரர்கள் அறிவித்துள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட்டினை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உத்தரவாதம் வழங்கிய பின்னரே பங்களாதேஷ் அணி வீரர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

பங்களாதேஸ் கிரிக்கெட் கட்டுப்பாடடுச்சபை அதிகாரிகளுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள சஹீப் அல் ஹசன் எங்கள் வேண்டுகோள்கள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நாங்கள் தேசிய கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடுவதுடன் இந்திய சுற்றுப்பயணத்திற்கான பயிற்சிகளில் ஈடுபடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் வெள்ளம்

ரயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

பேஸ்புக்கில் இனவாத கருத்துக்களை பதிவிட்ட இருவரின் நிலை