சூடான செய்திகள் 1

மின்னேரியாவில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – ஒருவர் பலி

(UTV|COLOMBO) – மின்னேரியா பகுதியில் நேற்றிரவு(23) இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

சில பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும்…

கல்வீச்சு தாக்குதலில் ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் காயம்