வகைப்படுத்தப்படாத

இலண்டன் நகரில் சிக்கிய மனித சடலங்களுடனான பாரவூர்த்தி

(UTV|COLOMBO) – இலண்டன் நகரின் கிழக்கே தேம்ஸ் நதிக்கரை அருகில் இன்று(23) 39 மனித சடலங்களுடன் இலண்டனுக்குள் நுழைந்த பாரவூர்தி ஒன்றினை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இலண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்சாலைக்கு அருகே இன்று ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு பாரவூர்தி ஒன்றினை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மடக்கி சோதனையிட்டனர்.

இதன்போது 39 சடலங்களை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், சுமார் 25 வயது மதிக்கத்தக்க பாரவூர்தியின் சாரதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

வட, தென் கொரியா-அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்

හදිසි නීතිය මසකින් දර්ඝ කෙරේ