சூடான செய்திகள் 1

காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் சமர்ப்பிப்பு

(UTV|COLOMBO) – காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் பாராளுமன்றில் இன்று(23) முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 01 ஆம் திகதி முதல் காபன் வரியை அகற்றுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பசுமைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அமுலாக்கும் வகையில், 2018ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தில் காபன் வரி அறிவிடும் திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

திருத்த வேளைகள் காரணமாக 02 நாட்களுக்கு மின்சார விநியோக தடை

மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்-ஆட்பதிவு திணைக்களம்

50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெங்கு நோயினால் பாதிப்பு