(UTV|COLOMBO) – 2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாத காலத்திற்கான இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான 4 மாத காலத்திற்கு அரச பணிகளைத் தொடர்வதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் அடங்கிய இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த இடைக்கால குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.