சூடான செய்திகள் 1

ஹேமசிறி – பூஜித் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO) – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் இன்று(23)உத்தரவிட்டுள்ளார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மேல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, கொழும்பு பிரதான நீதிவன் நீதிமன்றினால் கடந்த 09 ஆம் திகதி மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காலநிலையில் மாற்றம்

கிளினிக் பிரிவுக்கு விசேட தொலைப்பேசி இலக்கம்

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு