சூடான செய்திகள் 1

வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை – மங்கள

(UTV|COLOMBO) – வதந்திகளைப் பரப்பும் குழுவை கண்டுபிடிக்குமாறு அமைச்சர் மங்கள சமரவீர பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகளின் அதிபர்களினால் நேற்றைய தினம் பெற்றோர் அழைக்கப்பட்டு பாடசாலையில் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரமன்றி தென்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தேவையற்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

பின்னணி பாடகி ராணி காலமானார்

ஜுலை மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம்