சூடான செய்திகள் 1

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO) – 2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(23) முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய பிரதமர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

இதற்கமைய, இன்று காலை 10.30 அளவில் ஆணைக்குழவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ராவணா செயற்கைகோள்…

4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் தம்பதிகள் கைது

பெண் சந்தேகநபரொருவர் பொலிஸ் தடுப்பிலிருந்து தப்பியோட்டம்…