சூடான செய்திகள் 1

அவன்காட் நிறுவனத்தின் தலைவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு

(UTV|COLOMBO) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளது.

எவன் கார்ட் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடாத்திச் செல்வதற்கு அனுமதி வழங்குவதற்கு அந் நிறுவனத்திடமிருந்து 355 இலட்சம் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை மற்றும் இலஞ்சம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய வழக்கின் விசாரணைகளுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதலாவது பிரதிவாதி மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ மன்றில் ஆஜராகியிருந்தார்.

இரண்டாவது பிரதிவாதியான நிஸ்ஸங்க சேனாதிபதி, விசேட மேல் நீதிமன்றத்தினால் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன செப்டம்பர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 673 முறைப்பாடுகள் பதிவு

நாளை மற்றும் நாளை மறுதினம் பாடசாலைகளுக்கு பூட்டு