சூடான செய்திகள் 1

கோட்டாபயவுக்கு எதிராக அஹிம்சாவினால் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

(UTV|COLOMBO) – ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அமெரிக்கா – கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அது தொடர்பில் தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கோரியும் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கில், 18,585 குடும்பங்களைச் சேர்ந்த 60,345 பேர் பாதிப்பு

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்