சூடான செய்திகள் 1

அரசியல் கட்சி உறுப்பினர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) – அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று(22) காலை 10.00 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெறவுள்ள மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.

குறித்த சந்திப்பில் தேர்தல் வன்முறைகளை தடுத்தல் , தேர்தல் சட்டவிதிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தெளிவுப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த சந்திப்பில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதுடன்,
தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நிவாரணங்களை வழங்குவதற்கு ஆளுநர் அலுவலகம் விசேட வேலைத்திட்டம்

மீனவர்கள் மூவர் கைது

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்