சூடான செய்திகள் 1

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் வடக்கு பிரதேசத்தில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

கடும் மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் வாகன நெரிசல்

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்