சூடான செய்திகள் 1

தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தப்போவ குளத்தின் நீர் மட்டம் சுமார் 17.5 அடி வரை அதிகரித்துள்ளது.

இதனால் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் 2 அடி உயரத்திற்கும் 3 வான் கதவுகள் 1 அடி உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தபோவா, ராஜங்கனை மற்றும் தேதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் களுத்தறை மாவட்டத்தில் உள்ள குகுலே கங்கை அணயின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீர்நிலைகள் நதிகள் மற்றும் நீர் நிலைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருவதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

பிரதமர் மாலைத்தீவிற்கு விஜயம்

மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு அறிவுறுத்தல்

4 தேரர்களுக்கு பிடியாணை…