சூடான செய்திகள் 1

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO) – தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று(21) சமுர்த்தி அதிகார சபைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நேற்று முன்தினம் சமுர்த்தி அதிகார சபைக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் சென்றபோது, சுமார் 8 இலட்சம் சமுர்த்தி உறுதிப்பத்திரங்கள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அந்த இடத்தில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தயா கமகே மற்றும் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்த சமுர்த்தி உறுதிப் பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று மீண்டும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு செல்லவுள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறி அந்த அதிகார சபைக்கு சொந்தமான வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக ஆணைக்குழுவிற்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டுக்கமைய அவர்கள் அங்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்