(UTV|COLOMBO) – எதிர்வரும் ‘ஜி-7’ மாநாடு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சொகுசு விடுதியில் நடைபெறவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் வருடம் ஜூன் மாதம் 10 – 12ஆம் ஆகிய திகதிகளில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில், கோல்ப் மைதானங்களுடன் கூடிய சொகுசு விடுதியிலேயே குறித்த இந்த மாநாடு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.