(UTVNEWS | COLOMBO) – ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிப் பதவிகளில் இருந்து மேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இசுரு தேவப்பிரிய, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் மற்றும் மஹரமக தொகுதி அமைப்பாளர் பதவியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் தலைமையில் மஹரமகவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இசுரு தேவப்பிரிய கலந்து கொண்டதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவிக்கையில் தான் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்த பின்னரே குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.