(UTV|COLOMBO) -எவன் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய போது இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
எவன்கார்ட் நிறுவனத்துடன் தொடர்புடைய வழக்கு ஒன்று தொடர்பில் காலி நீதவான் நீதிமன்றம் வெளியிட்டிருந்த உத்தரவு ஒன்றிற்கு அமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட எவன் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.