சூடான செய்திகள் 1

தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்படும் எனவும் இதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளதாகவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை விநியோகிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பித்தவர்கள் தமது வாக்குகளை இம் மாதம் 31 ஆம் திகதியும், நவம்பர் மாதம் 1 ஆம் திகதியும் வாக்களிக்கவுள்ளனர்.

குறிப்பிட்ட இரண்டு தினங்களில் வாக்களிக்க முடியாதோர் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி அருகில் உள்ள தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் பாராளுமன்ற அமர்வு

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 06ம் திகதி…

“அனைத்து வாகனங்களையும் இறக்குமதி செய்ய தீர்மானம்”