சூடான செய்திகள் 1

பிரதமருக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

(UTV|COLOMBO) – அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை(18) தனக்கு முன்னிலையாக முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதால் தனக்கு நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என பிரதமர் அறிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தினுள் நெல் களஞ்சியப்படுத்தியதன் ஊடாக இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் 23 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஐ.தே.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் : மனு நிராகரிப்பு

இலங்கையின் புதிய வரைபடம் எப்படி ..! (படம் இணைப்பு)

பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயில் சேவை