சூடான செய்திகள் 1

ஹேமசிறி இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV|COLOMBO) – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு, அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துக் கொள்வதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹேமசிறி பெர்ணான்டோவிற்கு சிறைச்சாலை ஆணையாளரின் ஊடாக குறித்த அறிவித்தல் இன்று(15) மேற்கொள்ளப்படவுள்ளது.

மக்கள் வங்கியின் தலைவராக ஹேமசிறி பெர்ணான்டோ செயற்பட்ட காலப்பகுதிகளில் நிதி மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இதன்போது அவரிடம் சாட்சியம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்

ஜகத் விஜேவீர மற்றும் தாரக்க செனவிரத்னவுக்கு பிணை

கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது