(UTV|COLOMBO) – மாகாண சபைகளின் கீழ் இயங்கி வரும் எட்டு பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள திம்புலாகல-விலயாய மத்திய மகா வித்தியாலயம், தோபாவெவ மகா வித்தியாலயம், திவுலங்கடவல மத்திய மகா வித்தியாலயம், பகமூன மஹாசென் மகா வித்தியாலயம், பொலன்னறுவை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அம்பாறை-உஹன மகா வித்தியாலயம் மேலும் கம்பஹா ஹேனேகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் குளியாபிடிய சாராநாத் வித்தியாலயம் ஆகியன இவ்வாறு தேசிய பாடசாலையாக மாற்றம் பெறவுள்ளன.
மேற்படி பாடசாலைகளை மத்திய அரசு பொறுப்பேற்பதில் உடன்படாத கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இருப்பார்களாயின், குறித்த நபர்கள் மூன்று வருட சேவைக் காலத்திற்கு பிறகு மாகாண பொது சேவைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.