சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 375 முறைப்பாடுகள் பதிவு

(UTV|COLOMBO) – கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 375 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியமை தொடர்பில் 360 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 9 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு மூலம் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் என்பனவற்றில் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபெறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டு விண்ணப்பிக்கும் கால எல்லை…

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உபகுழு