சூடான செய்திகள் 1

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

(UTV|COLOMBO) – அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்த வேண்டாம் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் உள்ளிட்ட தரப்பினர்களிடம் கேட்டுக்கொண்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பொது மக்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது தொடர்பில் 1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது எழுத்து மூலம் அல்லது தொலைநகல் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் அதிகாரசபை அறிவித்துள்ளது.

Related posts

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

பெங்கிரிவத்த சுதா கைது…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]