சூடான செய்திகள் 1வணிகம்

லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்

(UTV|COLOMBO) – இந்த மாதத்திற்கான எரிப்பொருள் விலைத்திருத்தத்திற்கமைய எரிப்பொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாது என நிதியமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்றோல், 95 ஒக்டைன் பெற்றோல், சூப்பர் டீசல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறிருப்பினும், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை – இந்திய எரிபொருள் நிறுவனம் எரிபொருளின் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

ஒக்டைன் 92 ரக லங்கா பெற்றோல் மற்றும் எஸ்ட்ரா ப்றீமியம் யூரோ-3 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபா குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை – இந்திய எரிபொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 142 ரூபாவாகவும், எஸ்ட்ரா ப்றீமியம் யூரோ-3 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 148 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

Related posts

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.பெ இடையே ஏப்ரல் 10 மீளவும் பேச்சுவார்த்தை…

சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல்…