சூடான செய்திகள் 1

தேசிய சுற்றுலா தொழிலாளர்கள் சங்கம் கோப் குழுவில் முறைப்பாடு

(UTV|COLOMBO) – தேசிய சுற்றுலா தொழிலாளர்கள் சங்கம் தமது தொழிற்துறையில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவு குழுவான கோப் குழுவில் நேற்று (09) முறைப்பாடு செய்துள்ளது.

இதன்போது இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு புதிய திட்டங்கள் அடங்கிய முன்மொழிவுகளையும் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து வீழ்ச்சி கண்டுள்ள சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் தருவதாக உறுதியளித்த எந்தவொரு உதவித் தொகையும் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

கோப் குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னர் பொது மக்களால் அந்த குழுவுக்கு செய்யப்பட்ட முதலாவது முறைப்பாடு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பாக அறிவிப்பு