வணிகம்

B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிக்க உறுதி

(UTV|COLOMBO) – இலங்கை பொறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் B787 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது.

இலங்கை பொறியியல் நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் மாலைதீவிற்கான சேவையில் ஈடுபடுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு உட்பட்ட SIA Aviation company Trining academy என்ற நிறுவனத்தினால் இலங்கை பொறியியலாளர்கள் அதாவது மாலைதீவில் விமான சேவையில் ஈடுபட்டுவரும் பொறியியலாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள் என்று இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி விபுல குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

Related posts

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையில் வீழ்ச்சி

“மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காகவே சுயதொழில் ஊக்குவிப்புத் திட்டங்கள்”

Service Crew Job Vacancy- 100