சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – நாளை(11) நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று(10) முற்பகல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முழுமையான பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று காலை முதல் தேர்தல் மத்திய நிலையங்களில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிக்க 53 384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், 17 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் 47 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளைச் சேர்ந்த 155 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் அவர்களிலிருந்து 28 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திலிருந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வடக்கில் 5 மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிப்பு

பஸ் சாரதிகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

இலங்கையிலிருந்து குவைட்டுக்கு பணிபுரியச் சென்ற 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர்