சூடான செய்திகள் 1

ஶ்ரீ.சு.க – ஶ்ரீ.பொ.மு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

(UTVNEWS|COLOMBO) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகள் இன்று (10) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது

இதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோரும் பொதுஜன பெரமுன சார்பில் தவிசாளர் பேராசிரியர் G.L. பீரிஸ், உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தவிசாளர் பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை 24 ஆம் திகதி வரை நீடிக்கும்

சிறிசுமன மகா வித்தியாலத்தின் ஆரம்ப கற்றல் வள வகுப்பறைக் கட்டிடம் திறப்பு

கடற்படை அதிகாரி ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார்?