சூடான செய்திகள் 1

சிறைக் கைதிகளுக்கும் வாக்குரிமை வழங்கக் கோரி மனுத்தாக்கல்

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இன்று(09) மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட அந்த ஆணைக்குழுவின் நான்கு உறுப்பினர்களும் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தலின் போது சிறையில் உள்ள கைதிகளுக்கு வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், அதனூடாக அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கைதிகளுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு உத்தடவிடுமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டால் தேர்தலை நடத்த தயார்

ஜூலை முதலாம் திகதியில் இருந்து விஷேட தேவை உடையவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

கோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு