வணிகம்

ரயில்வே திணைக்களத்திற்கு 1920 மில்லியன் ரூபா இழப்பு

(UTVNEWS|COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த 12 நாட்களாக மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 1920 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில்வே திணைக்களத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முற்பதிவு செய்யப்பட்ட ரயில் அனுமதிச்சீட்டுக்கான பணத்தை பயணிகளுக்கு மீள வழங்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts

தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது

இலங்கைக்கு, அமெரிக்கா மீண்டும் ஜிஎஸ்பி சலுகை

சிரமத்திற்கு மத்தியில் விவசாயிகள்