சூடான செய்திகள் 1

மஹிந்தவுக்கு கட்டுப்படாத கோட்டாபய எவ்வாறு நாட்டை பாதுகாக்கப்போகிறார்?

(UTVNEWS|COLOMBO) – சிறுபான்மை இனங்களை அழிக்கப்போகும் கோட்டாவுக்கு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் வாக்களிக்கமாட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முதலாவது கூட்டம் நேற்று இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும் கட்சியின் காத்தான்குடி அமைப்பாளருமான எச்.எம்.எம்.முஸ்தபா தலைமையில் ஐ.தே.கட்சியின் காத்தான்குடி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானா, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீன் உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்யும் வகையில் காத்தான்குடியில் முன்னெடுக்கப்படவுள்ள தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரச்சாரங்களை மேற் கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இக் கலந்துரையாடலில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

Related posts

விசேட சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் அச்சமடைய தேவையில்லை

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கையே…

ஜெப்ரி அலோசியஸ் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை இரத்து செய்ய கோரி மனு