வகைப்படுத்தப்படாத

உதட்டை சுற்றியுள்ள கருமையை போக்க என்ன செய்யலாம்?

(UTVNEWS|COLOMBO) – சிலருக்கு உதட்டுப் பகுதியை சுற்றி கருமையாக காணப்படுவதுண்டு. இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தீர்வு காண முடியும்.

வாயின் அருகே மென்மையான தன்மை என்பதால் சூரிய ஒளி படும்போது மெலனின் ஹார்மோன் விரைவில் தூண்டப்பட்டு கருமையடையச் செய்துவிடும்.

இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் இறந்த செல்கள் அங்கே நிறைந்து அந்த கருமையை போகவிடாமல் செய்துவிடும்.

தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1 டீஸ்பூன்
தக்காளி சாறு – 1 டீஸ்பூன்
தயிர் – அரை டீஸ்பூன்

செய்முறை:
ஓட்ஸை பொடி செய்து அதனுடன் தக்காளி சாற்றினையும், தயிரையும் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். விரைவில் பலன் கிடைக்க, வாரம் மூன்று முறையாவது போடுங்கள்.

Related posts

விரைவில் பணிக்கு திரும்புவேன்…

Rail commuters stranded due to train strike

வேகமாக பரவி வரும் அம்மை நோய்