சூடான செய்திகள் 1

24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(UTVNEWS|COLOMBO) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று(08) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமிப்பு சபை தெரிவித்துள்ளது.

வத்தளை, பேலியகொட, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கம்பஹா, ஜா-எல ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் ரத்துபஸ்வல, இம்புல்பே ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

களனி ஆற்றின் தெற்குக் கரை அபிவிருத்தியின் இரண்டாம் கட்ட செயற்றிட்டத்திற்காக இவ்வாறு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமிப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று

சாய்ந்தமருது கல்முனை சவலக்கடை பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு உத்தரவு