விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ஒட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் பானுக ராஜபக்ஷ அதிகபட்சமாக 77 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19 ஒவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பந்துவீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 3 மூன்று விக்கெட்டுக்களையும், இசுரு உதான 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், இலங்கை அணி 36 ஒட்டங்களால் இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டியையும் வெற்றிக் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு – 20 போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

இந்திய கிரிக்கட் அணி விராட் கோலியை நம்பியே செயற்படுகிறது?-குமார் சங்கக்கார

சனத் ஜயசூரியவிற்கு எதிராக முறைப்பாடு

ஹிஜாப் அணிய விதித்த தடைய நீக்கியது பிரான்ஸ்!