(UTVNEWS|COLOMBO) – லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் உட்பட சாரதி படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், லிந்துலையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பஸ் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இவ்விபத்தில் பாடசாலை மாணவிகள் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததோடு, அதில் சாரதி மட்டும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பஸ் சாரதியை லிந்துலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.