சூடான செய்திகள் 1

பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு [PHOTOS]

– கொள்ளுபிடி ஜூம்மா பள்ளியின் முன்னேற்றத்திற்காக இராணுவ தளபதியினால் நிதி அன்பளிப்பு செய்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிகழ்வினை முன்னிட்டு கொழும்பு 3 இல் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கலந்து கொண்டார்.

நிகழ்வில், கொள்ளுபிடி ஜூம்மா பள்ளியின் பிரதான மௌவியான சல்மன் இசடீன் மற்றும் மௌவி ஆதம் பாவா முகமட் ரிஷ்வானின் தலைமையில் இராணுவ கொடிகளுக்கான ஆசிர்வாத மத வழிபாடுகள் இடம்பெற்றன.

மேலும் இராணுவ தளபதியின் பள்ளியின் தலைவர் ஹாஜ் முகமடுக்கு நினைவுச் சின்னம் ஒன்று பரிசாக வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். பின்பு பள்ளியின் செயலாளர் அல் ஹாஜ் ஐ.எஸ். ஹமீடினால் இராணுவ தளபதிக்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த சமய நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, இராணுவ தொண்டர் படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர்.

இந் நிகழ்வை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் பூரண ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts

பொதுஜன பெரமுன கட்சியின் ​தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பம்

சதொச நிறுவனத்தை உடைத்த மூவர் கைது

மைத்திரியுடனான பேச்சுவார்த்தை வெற்றி