சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல்

(UTVNEWS COLOMBO)-ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சட்டவிரோதமானது என அறிவிக்க உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவை முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா இன்று தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மனுவினை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

மேலும் இந்த மனு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 ஆண்டுகள் பதவியில் இருப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்

பிரதமர் நாளை யாழ். விஜயம்

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டபொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்…