சூடான செய்திகள் 1

கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் கைவிடப்பட்டது

(UTVNEWS|COLOMB0) – திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை பகுதியில் அமைந்துள்ள கொத்மலை சீஸ் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலையீட்டால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்வேறு குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 29ம் திகதி முதல் சீஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் அத் தொழிற்சாலையின் ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கமைய காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலுக்கு அமைவாக நேற்று சீஸ் தொழிற்சாலையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸின் உப செயலாளர் பரத் அருள்சாமி தொழிற்சாலையின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.

கோரிக்கைகள் அனைத்தையும் பொறுப்பேற்றுள்ள சீஸ் தொழிற்சாலை நிர்வாகம் சம்பளம் தொடர்பில், தொடர்ந்து வரும் நாட்களில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு தீர்வு ஒன்றுக்கு எட்டுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு இன்று முதல் வழமையான தொழிலுக்கு தொழிலாளர்கள் செல்ல வேண்டும் எனவும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

பூஜித் – ஹேமசிறி; எதிரான அடிப்படை உரிமை மனுக்களது விசாரணைக்கு அனுமதி

கொள்கலன் வாகனமொன்று கவிழ்ந்தமையினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது