சூடான செய்திகள் 1

பேச்சுவார்த்தை தோல்வி; புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

(UTVNEWS|COLOMBO) –ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் விசேட அமைச்சரவைக்குழுவிற்குமிடையில் இன்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றதால் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மாலை ரயில்வே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சரவை உபகுழுவிற்கும் இடையிலான பேச்சுவார்த்ததையின் போது தமது கோரிக்கைகளுக்கு தகுந்த தீர்வொன்று கிடைக்கப்பெறவில்லை.

அதனால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் ரயில்வே பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜானக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்களின் தொழில் சங்கங்களின் சுமார் 15000 உழியர்கள் கடந்த புதன்கிழமை நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

UTV பொதுத்தேர்தல் விசேட ஒளிபரப்பு

சபாநாயகரை சந்திக்கும் மகிந்த தேசப்பிரிய

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது…