(UTVNEWS|COLOMBO) – முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் நேற்று தனியார் ஒருவரின் நிலத்தினை உழவு செய்யும் போது ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட இடத்தில் 8 கிளைமோர் குண்டுகளையும் 60 ரிக்னெட்டர்களையும் இனம் கண்டு அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
குறித்த வெடிப்பொருட்கள் கடந்த கால போரின் போது புதைக்கப்பட்ட தொகுதி வெடிபொருட்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.