சூடான செய்திகள் 1

4 வது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTVNEWS|COLOMBO) – சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பித்த போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்வதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் நாளை விசேட பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

போராட்டத்தில் ஈடுபடும் ரயில் தொழிற்சங்கத்தினர் மற்றும் கடந்த தினங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய தொழிற்சங்கத்தினருடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், உரிய தீர்வு கிடைக்கும் வரை, தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவதாக ரயில் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

WHATSAPP மற்றும் FACEBOOK முடக்கம்