சூடான செய்திகள் 1

பயங்கரவாதிகளின் ஆதரவுடன் சஜித் போட்டியிடுவதாக பந்துல தெரிவிப்பு

(UTVNEWS|COLOMBO) –பயங்கரவாதிகளின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பல நிபந்தனைகளுக்கு இணங்கி மற்றும் பாரிய பிளவுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதன்போது தெரிவித்தார்.

Related posts

இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்வு..

தேசிய உணவு அரங்கம் 2018 கண்காட்சி

காலி வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை