சூடான செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று(26) மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களு, கிங் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நில்வளா கங்கையின் பானதுகம, மாபக பகுதிகள் பெருக்கெடுக்கும் நிலையை அண்மித்துள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம், இடர் முகாமைத்துவ நிலையம், தேசிய கட்ட ஆய்வு நிறுவகம், தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையங்களில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள்- ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி ரணில்

காங்கேசந்துறை பயணிக்கிறார் பிரதமர்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை சம்பவம் தொடர்பில், விசாரிக்க CID குழு – பொலிஸ்மா அதிபர்