சூடான செய்திகள் 1

பல பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை நாளையிலிருந்து சிறிது குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

மகிந்தவை இன்று சந்திக்கவுள்ள 16 பேர் கொண்ட குழு

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியனகே நியமனம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு