(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் தலைநகர் லாகூரை மையமாக கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளதுடன், நில அதிர்வு இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் பெண்கள் , குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.